ராஜரிஷி ஞான மையம்
உறவுகளை
வசப்படுத்துவது எப்படி?
பிறரோடு பழகும் கலை
இந்த பயிற்சி
நடத்துவதன் நோக்கம் :
வாழ்க்கையின் நோக்கம்
வாழ்க்கையின் அர்த்தம்,
வாழ்க்கையின் சாராம்சத்தை
ஆழமாக ஆராய்ந்து
புரிந்துகொள்வது...
வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் மன அமைதி,
மனத் தெளிவு அடைய நுட்பங்களைக் கற்றுக்கொள்வது...
பிரச்சனைகளை திறம்பட கையாண்டு,
நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது...
இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில் அன்பை வளர்ப்பது...
மொத்தத்தில்
வளமான, மகிழ்ச்சியான, வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்து
பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தராத வாழ்க்கை கல்வி இது.
நாள் : 1
பாட திட்டம்
1, மனிதனின் அடிப்படையான
இயல்பு என்ன?
2, எது சரி எது தவறு?
3, மதிப்பு என்பது என்ன?
மரியாதை என்பது என்ன?
4, சுய நலம் என்றால் என்ன?
சுய அன்பு என்றால் என்ன?
6, மனம் என்பது என்ன?
புத்தி என்பது என்ன?
7, மக்கள், மாக்கள், ரோபோ,
மனிதர், மாமனிதர், புனிதர்
என்பவர்கள் யார்?
8, அக்கறை என்றால் என்ன?
9, நம்மை பற்றி பிறர் மனதில்
நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த
நாம் என்னென்னவெல்லாம்
செய்ய வேண்டும்?
10, நம்மை பற்றி பிறர் மனதில்
நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு
கற்றுக்கொடுத்த 7 யுக்திகள் என்னென்ன?
நாம் பிறரோடு
ஒத்துப்போக வேண்டுமானால்
என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும்?
11, உரையாடல், வாதம், வாக்கு வாதம்
விதண்டாவாதம், நாகரீக பஞ்சாயத்து
இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன?
12, நம்மோடு பிறரை ஒத்துப்போக
வைக்க செய்யவேண்டுமானால்
நாம் என்னென்னவெல்லாம்
செய்யவேண்டும்?
என்னென்னவெல்லாம்
செய்யக்கூடாது?
13, எது அநாகரிகமானது...
14, காது கொடுத்து கேட்கும் கலையை
சிறப்பாக செய்ய
ஐந்து யுக்திகள் உள்ளது
அது என்ன?
நாள் : 2
பாட திட்டம்
1, பழகும்கலை பாடத்தில் எதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எந்த மூன்று வகை நபர்களை கடவுளாலேயே மாற்றவோ / திருத்தவோ முடியாது என்றும் திரும்ப திரும்ப கூறினோம் அல்லவா அவர்கள் யார் ?
2, மனிதனின் இயல்பை
புரிந்து கொண்டு நினைவில் வைத்து நடைமுறைபடுத்த வேண்டியது என்ன ?
3, மனித இயல்பின் இரண்டாவது விதியை புரிந்து கொண்டு நினைவில் வைத்து நடைமுறைபடுத்த வேண்டியது என்ன ?
4, மனித இயல்பின் மூன்றாவது விதியை புரிந்து கொண்டு நினைவில் வைத்து நடைமுறைபடுத்த வேண்டியது என்ன ?
5, நம்முடைய ஈகோவை
கையாள்வது எப்படி
6, என்னென்ன தன்மைகளை வைத்து ஒருவர் ஈகோவுடன் நடந்துகொள்கிறார் என்று கண்டுபிடிக்கலாம்?
7, என்னென்ன தன்மைகளை வைத்து ஒருவர் தனது ஈகோவை கையாள்கிறார் என்று கண்டுபிடிப்பது?
8, ஈகோ இல்லாத நபர்கள் யார்?,
யாருக்கு ஈகோ இருக்காது?
9, ஈகோ வராமல் தவிர்க்க
என்ன செய்ய முடியும்?
ஈகோவில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
10, பிறருடைய ஈகோவை
கையாள்வது எப்படி?
11, யாரால் பெருந்தன்மையுடனும் அடுத்தவர்களுடன் உண்மையான தோழமையுடன் இருக்க முடியும்?
12, தன் மீது கொண்டிருக்கும் அதிருப்தியிலிருந்து ஒருவர் மீண்டுவிட்டால் அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கும்?
13, பிறரை நேசிப்பது
எப்போது எளிதாக இருக்கும்?
14, தற்பெருமை என்பதை
எதோடு ஒப்பிடலாம்?
15, நமக்குள் எது அகம்பாவமாகவும்,
ஆணவமாகவும் உருவெடுக்கிறது?
16, தற்பெருமை பூர்த்தி அடைந்த ஒருவரின் பழகும் தன்மை எப்படி இருக்கும்?
16, சுய மதிப்பு குறைவாக இருப்பவர்கள் உருவாக்கும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கு என்ன வழி உள்ளது?
17, பிறருடைய ஈகோவை கையாள
எந்த இரண்டு விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும்,
எந்த மூன்று விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வகுப்பில் கூறினோம்...
18, நீங்கள் சொல்வதை
பிறர்ஏன் செய்யாமல் போகிறார்கள்?
19, நீங்கள் சொல்வதை செய்ய வைக்க
ஒரு எளிய வழி இருக்கிறது என்று சொன்னோம் அல்லவா! அந்த வழி என்ன?
20, உங்கள் உறவினர்கள்
எந்தெந்த காரணங்களால் உங்களிடம் அதிருப்தி அடைகிறார்கள்?
21, எதிர்பார்ப்பு என்றால் என்ன?எதிர்பார்ப்பதுசரியா? தவறா?
22, கிளி புத்தி,சொல் புத்தி, சுயபுத்தி,
சுயச் சொல் புத்தி என்றால் என்ன?
நாள் : 3
பாட திட்டம்
1, தெரிதல் - அறிதல்
புரிதல் - உணர்தல்
இவற்றிற்கு உள்ள
வித்தியாசம் என்ன ?
2, வார்த்தை என்பது
எதை
வெளிப்படுத்தக் கூடியதாக
இருக்கிறது?
3, பிறருக்கு பிடிக்கும்
ஆறு விதமான
அணுகுமுறை என்னென்ன ?
4, குறை விமர்சனம் கருத்து அலோசனை பரிந்துரை வலியுருத்துவது வற்புறுத்துவது கட்டளையிடுவது இவற்றிற்கு
உள்ள வித்தியாசம் என்ன ?
5,கட்டளை, உத்தரவு, அனுமதி,
COMMAND, ORDER, PERMISSION
இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன?
6,கட்டளை என்பது யாருக்கு?
உத்தரவு என்பது யாருக்கு ?
அனுமதி என்பது யாருக்கு ?
வழங்க வேண்டும்...
7, சட்டம், நியாயம், தர்மம், அதர்மம்,
என்றால் என்ன ?
8, புரிந்தவர் யார் ? புரியாதவர் யார் ?
புத்திசாலி யார் ? முட்டாள் யார் ?
9, எண்ணம், மனம், பண்பு, குணம் இவைகளுக்குள்ள வித்தியாசம்
என்ன ?
10, நாம் சொல்வதை
பிறரை செய்யவைக்க
என்ன செய்ய வேண்டும் ?
11, நாம் கூறுவதை பிறர் ஏன்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் ?
நாம் சொல்வதை ஏன்
செய்யாமல் போகிறார்கள் ?
12, நீங்கள் பழகும்
எந்த மாதிரியான விதம்
பிறருக்கு பிடிப்பதில்லை ?
13, உங்கள் உறவுகள்
உங்களிடம் எந்த காரணங்களால்
அதிருப்தி அடைகிறார்கள் ?
14, பிறரிடம் அணுகும் விதம்
எப்படியெல்லாம் இருக்க வேண்டும் ?
எப்படியெல்லாம் இருக்கக்கூடாது ?
15, குறை, விமர்சனம், கருத்து,
அபிப்ராயம், ஆலோசனை
இவற்றிற்குள்ள வித்தியாசம் என்ன ?
16, கோரிக்கை – விண்ணப்பம்
பரிந்துரை – அனுமதி
வலியுருத்துவது – வற்புறுத்துவது
கட்டளையிடுவது இவற்றிற்குள்ள
வித்தியாசம் என்ன ?
17, கட்டளை – உத்தரவு
தீர்ப்பு – தீர்வு
யாருக்கெல்லாம் எதை
செயல்படுத்த வேண்டும் ?
18, எது நாகரீகம் ?
எது அநாகரீகம் ?
19, தேவையானது - தேவையில்லாதது
இவற்றிற்குள்ள
வித்தியாசம் என்ன ?
20, விட வேண்டியது என்ன ?
பெற வேண்டியது என்ன ?
21, பழக்கம், வழக்கம்,
விளக்கம், ஒழுக்கம்
வித்தியாசம் என்ன ?
22, தெளிவு, உறுதி, துணிவு
என்றால் என்ன ?
தயக்கம், தைரியம்
என்றால் என்ன ?
23, நியாயம், சட்டம், தர்மம்
என்றால் என்ன ?
24, கர்மா – அகர்மா
நிஷ்காமிய கர்மா
தர்மா – அதர்மா
என்றால் என்ன ?
25, புரிந்தவர் யார்? - புரியாதவர் யார் ?
புத்திசாலி யார்? - மூடர் யார் ?
ஞானி யார் ?- அஞ்ஞானி யார் ?
நாள் : 4
பாட திட்டம்
1, பிறரை மாற்றுவதற்கோ அல்லது
திருத்துவதற்கோ நாம்
என்ன செய்ய வேண்டும் ?
நாம் சொல்லக்கூடிய சொல் செயல் ஆழ்மனதில் பதியக்கூடியதாக இருக்கவும் என்ன செய்ய வேண்டும் ?
2, பிறர் மனநிலையையும்,
உணர்ச்சியையும் திறமையாக
கையாள வேண்டுமானால்
எதை தெரிந்திருக்க வேண்டும் ?
பிறர் மனநிலையையும் உணர்ச்சியையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்...
3, மனதின் நான்கு பகுதிகள்
என்னென்ன ???
உணர்ச்சிப் பகுதி, நினைவுப் பகுதி,
இன்ப துன்பப் பகுதி, விருப்பப் பகுதி.
4, மக்களை கையாள்வதில்
கைத்தறிந்தவர் ஆக வேண்டும் என்றால்
நாம் என்ன செய்ய வேண்டும் ?
பிறரை பாராட்ட வேண்டும்...
நன்றி கூற வேண்டும்...
5, நாம் கூறுவதிலிருந்து
பிறர் எப்போது முரண்படுகிறார்கள் ?
இதுவரை நாம் எந்தெந்த அணுகுமுறையில்
மனித இயல்புக்கு எதிராக அதாவது,
ஆழ்மனதிற்கும், ஆழ் விருப்பத்திற்கும்
எதிராக செயல்பட்டுள்ளோம்
எந்த ஐந்து விதமான அணுகுமுறை
பிறரை மாற்றுவதற்கும்,
நாம் சொல்வதை பிறரை
செய்ய வைப்பதற்கும் உதவாது ?
ஈகோவை தொழக்கூடாது,
விமர்சிக்க கூடாது, அனைவரும் முன்னிலையிலும் விமர்சிக்க கூடாது... கட்டளை இடக்கூடாது, உத்தரவிடக்கூடாது...
6, ஆழ்மனது ஒரு விஷயத்தை
ஏற்றுக்கொள்வதற்கு
ஒரே ஒரு வழிதான் உள்ளது,
என்று சொல்லிக்கொடுத்தோமல்லவா
அது என்ன வழி ?
அன்பாக பேசுவது...
7, பிறர் ஒரு நல்ல குணத்தை தங்களிடம்
உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று
நீங்கள் விரும்பினால் அதற்கு,
சிறந்த வழி ஒன்று உண்டு
என்று சொல்லிக் கொடுத்தோமல்லவா
அது என்ன வழி ?
ஆழ்மனதை தொடுவது போல் பேசுவது...
8, நாம் சொல்வதை பிறரை செய்ய வைக்க
நாம் செயல்படுவதற்கு முன்பாக
எந்த நான்கு கேள்விகள் நமக்குள்
கேட்டுக்கொள்ள வேண்டும் ?
நம் விருப்பத்திற்கு தீனி போடுபவரா ?அவர்கள் விருப்பப்படி செய்ய
தயாராக உள்ளவரா ?
அவர் வெறுப்பு பகுதியை
விருப்ப பகுதியை பெற விரும்புகிறவரா ?அன்பு பகுதி வேண்டுமா ?
அங்கீகாரம் வேண்டுமா ?
புகழ்வது வேண்டுமா ?
9, உங்களோடு பேசிக்கொண்டிருப்பவர்
கோபத்தில் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது
அவரை ஆசுவாசப்படுத்த
நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?
நாம் பேசும்பொழுது
சப்தம் குறைத்து பேசலாம்
எதிர்வாதம் பண்ணாமல் இருக்கலாம்...
10, சத்தமான பேச்சு எதை போன்றது
என்று கூறினோம்.
சத்தமான பேச்சு தொற்று நோயை போன்றது முதல் விதி சுயநலம்...
இரண்டாம் விதி நாம் எதிர்பார்ப்பது போல் நாமும் நடக்க வேண்டும்...
மூன்றாவது விதி அங்கீகாரம்...
மனித இயல்பின், முதல் விதி
இரண்டாவது விதி
மூன்றாவது விதியை
பயன்படுத்தி
உணர்ச்சியை கையாள்வது எப்படி ?
11, எதை மனதில் வைத்து
நம்முடைய பேச்சை துவங்கினால்
பிறரின் உணர்ச்சியையும்,செயல்பாட்டையும்
நம்மால் பெருமளவுக்கு
கட்டுப்படுத்த முடியும்?
ஒருவர் பேசும் பொழுது ஆம் இல்லை
என்ற வார்த்தையில் பேசினால்
ஆள் மனது அதை ஏற்காது...
12, நன்றிஉணர்வு என்றால் என்ன?
நன்றி உணர்வு ஒரு சக்தி...
13, நன்றியை எத்தனை வகையாக
பிரித்து கூறினோம்
எந்த வகை நன்றி மிகவும் சிறந்தது
வார்த்தை நன்றி, உணர்ச்சி நன்றி,
மனம் நன்றி, செயல் நன்றி, போலி நன்றி, கடமை நன்றி, வாக்கு நன்றி,
இவை அனைத்திலும்
செயல் நன்றி சிறந்தது...!
14, திறம்பட நன்றி
கூறுவதற்கான ஐந்து யுக்திகள்
என்று சொல்லிக்கொடுத்தோமல்லவா
அவை என்னென்ன ?
இறைவனுக்கு நன்றி
நமக்கு கிடைத்த அனைத்து விஷயங்களுக்கும் நன்றி
நபர்களுக்கு நன்றி
நமக்கு கிடைத்த செயல் செல்களுக்கு நன்றி நன்றி உணர்வு பூர்வமாக
ஆழ்மனதிலிருந்து சொல்ல வேண்டும்...!
15, திருக்குறளில் செய் நன்றி
அறிதல் என்ற ஞான கல்வியின் மூலம்
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
பாடம் என்ன ?
16, யாரால் பாராட்ட முடியும் ?
யாரால் பாராட்ட முடியாது ?
பிறரை குறை கூறாமல், விமர்சிக்காமல்,
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடியவர்கள்
பிறரை பாராட்ட முடியாது...!
17, பிறரை தாராளமாக பாராட்டுவதற்கான
முக்கியமான இரண்டு யுக்திகள்
என்னென்ன ?
18, காயப்படுத்தாமல்
பிறரை விமர்சிப்பதற்கான
ஏழு யுக்திகள் என்னென்ன ?
நாள் : 5
பாட திட்டம்
1, நம்மால் மட்டுமல்ல
கடவுளாலேயே திருத்த முடியாத
மூன்று வகை நபர்கள் யார் ?
2, பகவத் கீதை கூறும்
தர்மத்தின் அடிப்படை என்ன ?
தர்மத்தின் இறுதி இலக்கு என்ன ?
3, தண்டனை நியாயமா ? - அநியாயமா ?
தண்டனை தர்மமா ? - அதர்மமா ?
4, தர்மத்திற்கு புறம்பான
எதிர்மறையானவர்கள் யார் ?
5, கர்ம யோகம் என்றால் என்ன ?
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
என்றால் என்ன ?
6, மனிதாபிமானம் - மனித நேயம்
என்றால் என்ன ?
7, சுதந்திரம் - என்றால் என்ன ?
8, நார்சிசீஸ்ட் நபர்களை
எப்படி கண்டுபிடிப்பது ?
எப்படி கையாள்வது ?
9, கடவுளாளே திருத்த முடியாத
ஆட்களிடம் நாம் எப்படி
அணுக வேண்டும் ?
பயிற்சி நடத்துபவர்
★ வாழ்வியல் பயிற்சியாளர் ★
ராஜரிஷி தரணியோகி
R.14015/25/96-U & H(R)(PT)
| இயற்கை மருத்துவ ஆலோசகர் |
| முழுமை நல ஆலோசகர் |
| டயட் ஆலோசகர் |
| ஊட்டசத்து உணவு நிபுணர் |
| தியான சிகிச்சையாளர்|
★ஆன்மீக வழிகாட்டி ★
இது போன்ற பயிற்சியின் மூலம்
தெளிவான வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு பின்பற்றுபவரே
வாழ்க்கையில் மகிழ்ச்சியான வெற்றியாளராக பயணிக்க முடியும்️.
வாருங்கள்
தன்னை உணர்வதற்கான பயணத்தைத் தொடங்குவோம்️.
இந்த பயிற்சியில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?
ஒருவருடைய ஈகோவானது அவருடைய
ஆழ்மனதின் வாசலில்
நின்று கொண்டு
அவரை பாதிக்கக்கூடாது
என்று காவல் காத்து கொண்டிருக்கிறது
அந்த ஈகோவை
நீங்கள் தூண்டினால்
உங்கள் கருத்துக்கள்
அவரின் ஆழ்மனதை நெருங்காதபடி அது தடுத்துக்கொள்கிறது.
ஒருவரது ஈகோவை தாண்டி ஆழ்மனதிற்குள்
உங்கள் கருத்தை
நுழைப்பது எப்படி❓
என்பதை கற்றுக்கொள்ள நினைத்தால்...
வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பிரச்சனையை
அணுகுவதற்கு
இரண்டு வழிகள் உள்ளது
ஒன்று அன்பு வழி...
மற்றொன்று
அதிகார வழி...
ஒரு மனிதர்
நிமிர்ந்து நிற்கும் போது
பெரிய ஆள் ஆகிறார்...
வளைந்து கொடுக்கும் போது
பெரிய மனுஷன் ஆகிறார்...
சூழ்நிலைக்கு தக்கவாறு
எந்த வழியை பின்பற்றி
நம் நிம்மதியை
தக்க வைத்துக் கொள்வது
என்பதை கற்றுக்கொள்ள நினைத்தால்...
நமது பிடிக்காதவர்
என்று நாம் கருதுபவரின் கருத்துக்களை
நாம் 👂காதில்👂
கூட வாங்கிக் கொள்வதில்லை
நம் பிடித்தவர்களின் கருத்துக்களை கண்டு
நாம் பயப்படுவதில்லை...
நாம் நம் கருத்துக்களை பிறரிடம் கொண்டு சேர்க்க முயலும் போது
அது அவர்களின் ஆழ்மனதில் பதிவதை
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளாதவரை
எந்த ஒரு கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது ஒருவருடைய
ஆழ் விருப்பத்திற்கு எதிராக
ஒரு கருத்தை
ஒப்புக்கொள்ள வைக்க
முயற்சி செய்தால்
அவர் தன் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்.
👇👇👇👇👇👇👇👇👇
ஆழ்மனது ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கு
ஒரே ஒரு வழிதான்
உள்ளது.
👇👇👇👇👇👇👇👇👇
அந்த வழி என்னவென்று தெரிந்துகொள்ள நினைத்தால்...
பிறருடைய
சுய மரியாதையை
மட்டம் தட்டுவதன் மூலம்
நாம் நம்முடைய
தற்பெருமையை உயர்த்திக்கொள்ள முயல்வது உறவுகளுக்குள்
நாம் ஏற்படுத்துகின்ற மிகப் பெரிய முட்டுக்கட்டையாகும்
பிறரை
மட்டம் தட்டாமல்
நம்முடைய
மதிப்பு மரியாதையை
நிலை நாட்டுவது எப்படி
என்பதை கற்றுக்கொள்ள நினைத்தால்...
👇👇👇👇👇👇👇👇👇
ஒருவரின் தவறை
தெரியபடுத்துவது என்பது அவரை
வெற்றிகரமாக
காயப்படுத்துவது அல்ல...
மாறாக அவரை ஊக்குவிப்பதாகும்
அதாவது அவர்களை
மேலும், திறமையாக
செயல்பட செய்வதாகும்.
முடக்கி விடுவதல்ல...
முடுங்கி விடுவது.
👇👇👇👇👇👇👇👇👇
காயப்படுத்தாமல் பிறரது தவறை சுட்டிகாட்டுவது எப்படி❓
என்பதை கற்றுக்கொள்ள நினைத்தால்...
👇👇👇👇👇👇👇👇👇
மனிதாபிமானம்...
நன்றி...
பொதுநலம்...
விட்டுக்கொடுத்தல்...
அன்பு... பாசம்...
நேசம்... இதில்
ஒன்று கூட
துளி அளவும் இல்லாமல்
ஆனால், இருப்பது போல நடிக்கும் நச்சு மனப்பான்மை கொண்ட நபர்களிடம்
எப்படி நடந்து கொள்வது❓
என்பதை கற்றுக்கொள்ள நினைத்தால்...
👇👇👇👇👇👇👇👇👇
இந்த பயிற்சியில்
யாரெல்லாம்
பங்கேற்கலாம்❓
👉10 வயதுக்கு👨👩👧👦மேற்பட்ட
அறிவாளிகள்
👉 தொழில் செய்பவர்கள்
👉 வேலை செய்பவர்கள்
👉 முதலாளிகள்
👉 குடும்ப தலைவர்கள்
👉 குடும்ப ஒற்றுமைக்காக
பஞ்சாயத்து செய்பவர்கள்
👉 வழக்கறிஞர்கள்
👉மருத்துவர்கள்
👉 பொது சேவை செய்பவர்கள்
👉மனித 🌻உறவுகளோடு
சுமூகமாக, சந்தோஷமாக
கொண்டாட்டமாக வாழ வேண்டும்
என்ற ஈடுபாடு இருப்பவர்கள்
👉யாரிடமும் நட்பாக இல்லாவிட்டாலும் பகையாக இருக்க வேண்டாம்
என்று நினைப்பவர்கள்
👉ஒவ்வொரு நாளும்
மன மகிழ்ச்சியோடும்
🧘🏻♀️உற்சாகத்தோடும்🧘🏻♂️
வாழ நினைப்பவர்கள்
👉தனது சிந்தனையை,
பேச்சை, செயலை,
நடவடிக்கையை,
அணுகுமுறையை
சிறப்பாக கையாள வேண்டும் என்று நினைப்பவர்கள்
இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.
இந்த பயிற்சி வகுப்பில்
யாரெல்லாம் பங்கேற்கலாம்❓
👇👇👇👇👇👇👇👇👇
👨👩👧👦குடும்பத்தில்👨👩👧👦
ஒற்றுமை வேண்டும்
என்று நினைப்பவர்கள்
கணவன் 👫 மனைவி அன்யோன்னியமாக வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்
சொந்தம், பந்தம், நட்பு உறவுகளில்
சுமுகமான உறவு வேண்டும்
என்று நினைப்பவர்கள்
👩❤️👨காதலர்களுக்குள்👩❤️👨
அன்பு வேண்டும்
என்று நினைப்பவர்கள்
🎅பெரியவர்களுக்கு
மரியாதை வேண்டும்
என்று நினைப்பவர்கள்
மன உளைச்சல் இல்லாமல்
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
எப்பொழுதும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
நல்லவர்கள் - கெட்டவர்கள்
அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்
மற்றவர்களிடம்
ஏமாறாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்
சுய நலவாதிகளிடமிருந்து
தப்பிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்
மனித உறவுகளை பற்றி முழுமையாக
புரிந்து கொள்ள வேண்டும்
என்று நினைப்பவர்கள்
யார் உண்மையான அன்பு செலுத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்...
இந்த பிறவியின் இறுதி இலட்சியம் என்ன ?
அதை அடையும் வழிமுறைகள் என்னென்ன ?
தனக்குத் தானே குருவாவது எப்படி ?
வாழ்க்கையை கொண்டாடுவது எப்படி ?
வாழ்க்கை கல்வியை கற்றுக்கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புபவர்களும்...
ஞான வாழ்க்கை வாழ நினைப்பவர்களும்...
இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
வாழ்வித்து வாழ்...
மகிழ்வித்து மகிழ்...
இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு...
முடிந்ததை செய்வோம் முடியாதவருக்கு...
வாழ்க செழிப்புடன்.
வாழ்க நிறைவுடன்.
© 2024 ராஜரிஷி ஞான மையம் - All Rights Reserved. Privacy Policy